மகாலட்சுமி கோவிலில் முதலாம் ஆண்டு விழா
ADDED :2536 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் மகாலட்சுமி, குருநாதஸ்வாமி, குருவம்ம, சித்தம்ம சென்னய்ய, சென்னம்ம சித்தம்ம திருக்கோவில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, முத்துவிநாயகர் குல தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், கலச ஸ்தாபனம், ஹோமங்கள் நடந்தன. காலை, 10.00 மணிக்கு மகாலட்சுமி அபிஷேகம், கலச தீர்த்த அபிஷேகம், பிரசாத வினியோகம் ஆகியன நடந்தன.நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்கமிட்டியார் செய்து இருந்தனர்.