உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி பிரமோற்ஸவ தேரோட்டம்

ராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி பிரமோற்ஸவ தேரோட்டம்

ராஜபாளையம் : ராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி பிரமோற் ஸவ தேரோட்டம் நடந்தது.

இக்கோயிலில் மாசி மகா பிரமோற்ஸவம் விழா கடந்த 10ல் கொடியேற்றுடன் துவங்கியது. விழாவில் தினமும் அம்பாள் , சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று (பிப்., 18ல்) நடந்தது.

இதை முன்னிட்டு காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்துடன் திருமுறை மன்றம், பஞ்ச உபசார குழு சைவ சித்தாந்த சபை உள்ளிட்ட பல்வேறு வாத்தியங்கள் முன் செல்ல திருத்தேரானது கோயிலில் இருந்து தென்காசி ரோட்டில் உள்ள ராமமந்திரம் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !