இடைப்பாடி, காளியம்மன் கோவில் சக்திகரகத்துடன் ஊர்வலம்
ADDED :2531 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, தாவாந்தெரு, காளியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 15ல் தொடங்கியது. வரும், 21ல் தீ மிதித்தல் விழா நடக்கவுள்ள நிலையில், சக்தி கரகம் அழைப்பு ஊர்வலம், நேற்றிரவு (பிப்., 18ல்) நடந்தது. இடைப்பாடி, சரபங்கா ஆற்றிலிருந்து, காணியாச்சிகாரர் கோபாலகிருஷ்ணன் கரகத்தை எடுத்துவந்தார். அவருடன், தாவாந்தெரு சுற்றுவட்டார பகுதி மக்கள் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தை அடைந்தனர்.