மயிலம் முருகர் புதுச்சேரிக்கு புறப்பட்டார்
ADDED :2465 days ago
மயிலம்: மாசி மகத் திருவிழாவுக்காக மயிலம் வள்ளிதெய்வானை சுப்பிரமணியர் சுவாமி புதுச்சேரிக்கு புறப்பட்டார். இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர், பாலசித்தர், மூலவருக்கு பால், தேன், பஞ்சாமிர்த அபிஷேம் நடந்தது.
மகா தீபாரதனைக்கு பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று 19ம் தேதி புதுச்சேரி கடற்கரையில் நடக்கும் மகா தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பாக செய்து வருகிறார்.