சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் சோம வார உச்சிகால பூஜை
ADDED :2528 days ago
கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடைபெற்றது.கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் அமைந்துள்ள,பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. காலை 11:30 முதல் மூலவர் பாலேஸ்வரருக்கு, லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.
பின்னர் பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச பூஜைகள் நடை பெற்றது.தொடர்ந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமும், அன்ன தானமும் வழங்கப் பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், ஆலய அர்ச்சகர் கோபி அய்யர் ஆகியோர் செய்தனர்.