சத்தியகண்டனூர் ஆதிசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2529 days ago
கண்டாச்சிபுரம்: சத்தியகண்டனூர் ஆதிசக்திமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் (பிப்., 17ல்) இரவு குளக்கரையில் கரகத்திற்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. நேற்று 19 ல், பகல் 12.00 மணிக்கு மூலவர் ஆதிசக்தி மாரியம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வினாயகர் மற்றும் மாரியம்மன் தேரோட்டமும், சாகை வார்த்தல் வழிபாடு செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.சத்தியகண்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் செய்தனர்.