நான்கு அப்பா!
ADDED :4991 days ago
நம்மைப் பெற்றவரைத் தவிர இன்னும் நான்கு பேரை தந்தை ஸ்தானத்திற்கு ஒப்பிடுகிறது சாஸ்திரம். ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கியவன், அங்கே நிற்கும் பெரியவரைப் பார்த்து, நீங்கள் என் அப்பா மாதிரி, என்னைக் காப்பாற்றுங்கள், என கதறுகிறான். அவனது பயத்தைப் போக்கிக் காப்பாற்றுகிறவர் தந்தைக்கு சமமானவர். பூணூல் போடுவது தந்தையின் கடமை. ஒருவேளை தந்தை இல்லாத பட்சத்தில் சித்தப்பா, பெரியப்பா பூணூல் இட்டால் அவரும் தந்தைக்கு சமமானவர். யார் ஒருவர் ஒரு குழந்தைக்கு கல்வியை ஆரம்பித்து வைக்கிறாரோ, அந்த ஆசிரியரும் தந்தைக்கு சமமானவர். ஒருவன் பசியாய் இருக்கும் போது, யாரொருவர் உணவளித்து பாதுகாக்கிறாரோ அவரும் ஒரு தந்தையே. இவர்களுக்கெல்லாம் தந்தைக்கு தரும் மரியாதையைச் செய்ய வேண்டும்.