திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :2525 days ago
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயில் பகல் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தெப்பக்குளத்தை சுற்றி விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவம் பிப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த உற்சவத்தில் தினசரி காலை பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (பிப்.,19ல்) பகல் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பகல் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தெப்பக்குளத்தை சுற்றி விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். தெப்ப உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.