உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் திருக்காலிமேடு,செல்வ கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் திருக்காலிமேடு,செல்வ கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடு, செல்வ கணபதி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் மற்றும் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடந்தது.காலை, 7:15 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நாக சிலைகளுக் கும், கோவிலில் சுயம்புவாக உள்ள அரச மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் நடந்தது.மூலவர், செல்வ கணபதி விநாயருக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !