முக்கா மைல் மண்டபம்!
ADDED :2457 days ago
ராமேஸ்வரம் கோயிலின் மூன்றாம் பிரகாரம்சிவாலயங்களில் மிகவும் நீண்டது. முக்கால் மைல் நீளம் (சுமார் 1.15 கி.மீ) கொண்ட இந்த பிரகாரம் 3850 அடி கொண்டது. ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியால் 1740ல் தொடங்கப்பட்ட இந்த பிரகாரப் பணி 30 ஆண்டுகளில் முடிந்தது. இந்த மண்டபத்தில் 1212 துõண்கள் இம்மியளவும் வரிசை மாறாமல் நிறுத்தப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயம். ராமேஸ்வரம் தீவிற்கு, படகு தவிர பிற போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத காலத்தில், இவ்வளவு கற்களையும் கொண்டு சென்று பணிகளை நிறைவேற்றியிருப்பது காண்போரை வியக்க வைக்கிறது. அதிசயம் மிக்க இந்த மண்டபத்திற்கு ‘சொக்கட்டான் மண்டபம்’ என்று முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்தது.