பார்வை இல்லாதவர்கள்சூரியநமஸ்காரம் செய்வதால் பலன் உண்டா?
ADDED :2537 days ago
உண்டு. ‘கண் கெட்டபின் சூரியநமஸ்காரம்’ என்று ஒரு சுலவடையே இருக்கிறது. எந்த ஒரு செயலையும் காலம் கடந்து செய்யாமல், அதற்குரிய தருணத்தில் செய்ய வேண்டும் என்பதை இது காட்டுகிறது. சூரியனை வழிபட்டால் கண்பார்வை, ஆரோக்கியம் மேம்படும்.காலையில் நீராடியதும், கிழக்கு நோக்கி நின்று மனக்கண்ணால்சூரியனை தரிசித்தபடி வழிபாடு செய்யுங்கள். இதில் பார்வையுள்ளவர், பார்வையற்றவர் என்ற பேதமில்லை. கண் மட்டுமின்றி உடலின் மற்ற உறுப்புகள் பலமடையவும் சூரியன் அருள்வார்.