ப.வேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் குடமுழுக்கு
ப.வேலூர்: ப.வேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி மற்றும் சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (பிப்., 22) நடக்கிறது இதை முன்னிட்டு, நேற்று (பிப்., 21ல்), ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், முதல்கால பூஜையாக விக்னேஸ்வர பூஜை, தீப பூஜை, ரக்ஷா பந்தனம், தனபூஜை, யாக சாலை பிரவேசம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று (பிப்., 21ல்) காலை, இரண்டாம் கால பூஜை மற்றும் யாக வேள்வி; மாலை, வேத பாராயணம், மூன்றாம் கால பூஜை, கோபுரம் கண் திறப்பு மற்றும் அஷ்ட பந்தனம்; நாளை (பிப்., 22ல்), பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி மற்றும் சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.