ஈரோட்டில் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா துவக்கம்
ADDED :2458 days ago
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேட்டில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா , நேற்று முன்தினம் (பிப்., 19ல்) இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. முன்னதாக, ஈரோடு காவிரியாற்றில் இருந்து, பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். குண்டம் இறங்கும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருக்க துவங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வரும், 25ல், இரவு, 7:00 மணிக்கு, கொடியேற்றம், மார்ச்., 5 இரவு, 6:00 மணிக்கு குண்டம் பற்ற வைத்தலும், 6 அதிகாலை, 5:00 மணிக்கு குண்டம் இறங்குதலும், பொங்கல் விழாவும், இரவு, 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.