உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்

கரூர் வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நடந்தது. கடந்த, 12ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 15ல் வெள்ளி கருடசேவை, 18ல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று (பிப்., 20ல்) காலை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (பிப்., 21ல்)மாலை தெப்போற்சவம், 27ல், ஆளும் பல்லக்கு, 28ல், ஊஞ்சல் உற்சவம், மார்ச், 1ல் புஷ்ப யாகம் நடக்கிறது.

* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில், மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (பிப்., 20ல்) காலை சுவாமிகள் சந்திப்பு மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, காவிரி ஆற்றில், தீர்த்தவாரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !