கரூர் ஆவுடைய லிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :2727 days ago
கரூர்: மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தோகைமலை அருகே, குன்னுடையார் மலையில் உள்ள, ஆவுடையலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலையில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது.
அதன் பின், ஓதுவார்கள் சிவன் பாடல்களை பாடிக்கொண்டு, குன்னுடையார் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆர்.டி.மலை கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.