குளித்தலை அருகே, சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :2459 days ago
கரூர்: குளித்தலை அருகே, தோகைமலையில், சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், 30ம் ஆண்டு பாதயாத்திரை நேற்று (பிப்., 20ல்) துவங்கியது. தோகைமலை குறிஞ்சி நகரிலுள்ள பகவதி அம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பாதயாத்திரையை துவக்கினர். பின், வெள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த பஜனையில் கலந்து கொண்டனர். இப்பாதயாத்திரையில், தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.