கபால காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2622 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில், 16 அடி உயரத்தில் அமைந்துள்ள கபால காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. விக்னஷே்வர பூஜை, புண்யா காஷணம், கலச பூஜை, பிரத்யங்கிரா ஹோமம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. 208 பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.