உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைப்பாடி காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கோலாகலம்

இடைப்பாடி காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கோலாகலம்

இடைப்பாடி: இடைப்பாடி, தாவாந்தெரு, காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17ல், சக்தி கரக ஊர்வலம், நேற்று முன்தினம், திருக்கல்யாணம் நடந்தது. நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர், நாக்கு அலகு, எலுமிச்சை அலகு குத்தியும், மினி ஆட்டோ, ஆம்னி வேன் போன்ற வாகனங்களை இழுத்து வந்தும், தீ மிதித்து பரவசமடைந்தனர்.

எம்.எல்.ஏ., நேர்த்திக்கடன்: மகுடஞ்சாவடி அருகே, அ.புதூர், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, ஒண்டிபனை கிராமத்திலிருந்து, கோவில் வளாகம் வரை, திரளான பக்தர்கள், தீர்த்தக்குடங்களுடன், ஊர்வலமாக வந்தனர். 9:00 மணிக்கு, காளியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட குண்டத்தில், பக்தர்கள் தீ மிதித்தனர். சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜாவும் தீ மிதித்தார். தொடர்ந்து, ஊர்மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு, பலர் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். இன்று மாலை, வண்டி வேடிக்கை நடக்கிறது. பிப்., 24ல், மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !