உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவாரூர்: குடவாசல் அருகே, செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவிலில், கடந்த,2006 ல், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 12 ஆண்டுகள் கழித்து திருப்பணிகள் முடிந்து, இன்று (பிப்.,22) மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 18ம் தேதி காலை 7:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை நடந்தது. மறுநாள் 19 ம்தேதி மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 20ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் காலபூஜையும், அன்று மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும் நடந்தன. 21ம்தேதி, காலை நான்காம் கால பூஜைகள், மாலை 5:00 மணிக்கு ஐந்தாம்கால பூஜைகள் நடந்தன. அன்று மாலை, 6:00 மணி முதல், கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, கன்யாபூஜை,  சுவாசினி பூஜைகள் நடந்தன. இன்று காலை 6:00 மணிக்கு, ஆறாம்கால யாகசால பூஜைகள் துவங்கின. யாகசாலை பூஜைகள் முடிந்து, 8:20 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தன. பின், காலை, 8:45 மணிக்கு மூலவர், அம்பாள், நடராஜர், வினாயகர், சுப்ரமணியர் விமானங்களில் உள்ள கலசங்களில் புனிதநீர்  ஊற்றி, மகாகும்பாபிஷேகம் நடந்தது. அத்துடன், ஸ்ரீமகாமேரு மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !