வாலாஜாபாத் சுங்குவார்தோப்பு உற்சவம் கோலாகலம்
ADDED :2752 days ago
வாலாஜாபாத்:சுங்குவார்தோப்பு திருவிழா, நேற்று முன்தினம் (பிப்., 20ல்)இரவு, கோலாகலமாக நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, சீயமங்கலம் கிராமத்தில், பாலாறு ஆற்றங்கரையை ஒட்டி சுங்குவார்தோப்பு உள்ளது. இங்கு, மாசி பவுர்ணமி தினத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் மற்றும் இளையனார்வேலூர் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், உற்வச மண்டபத்தில் எழுந்தருளுவர்.
நடப்பாண்டு, மாசி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், இவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இரவு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய, பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர், ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இளையனார்வேலூர் பாலசுப்ரமணியர் விசேஷ பூஜைக்கு பின், அவளூர் கிராமத்திற்குச் சென்றார்.