ராசிபுரம் பட்டணம் தண்டுமாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2461 days ago
ராசிபுரம்: பட்டணம், தண்டுமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. ராசிபுரம் அருகே, பட்டணத்தில் தண்டுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 15ல் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் மற்றும் தேரோட்டம் நேற்று முன்தினம் (பிப்., 20ல்) நடந்தது. அலங்கரித்த அம்மன் சிலையை தேரில் வைத்து பூஜை செய்த பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகள், ஆண்கள் என, அனைவரும் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது, தேங்காய், பழம், பூ உள்ளிட்டவையை அம்மனுக்கு வைத்து பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.