உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு சமஸ்கிருத பயிற்சி இலவச வகுப்பு

ஈரோடு சமஸ்கிருத பயிற்சி இலவச வகுப்பு

ஈரோடு: சமஸ்கிருதத்தில் எழுத, படிக்க, பேச, ஸம்ஸ்க்ருத பாரதீ அமைப்பு மூலம், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பல நாடுகளில் இம்மொழியை விரும்பி படிக்கின்றனர். எனவே, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது. ஈரோட்டில் வரும், 23 முதல் மார்ச், 2 வரை, பூர்ண யோகா நிலையம், 39, முத்து வேலப்பா தெரு, ஈரோடு, என்ற முகவரியில் பயிற்சி நடக்கிறது. காலை, 11:00 மணி முதல், 12:00 மணி, மாலை, 5:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், 73394-21896, 90039-34344 என்ற மொபைல் எண்களில் பெயரை பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !