காரமடை அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவ விழா
ADDED :2745 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவ விழா நடந்தது. காரமடை அரங்கநாதர்கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழா முன்னிட்டு கடந்த, 19ம் தேதி தேரோட்டம் நடந்தது. 20ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு தெப்பக்குளத்தில் அலங்காரம் செய்த தேரில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. பின்னர் தண்ணீரில் மிதந்த தேரை குளத்தின் நான்கு பக்கமும் ஓட்டிச் சென்றனர். இந்த தெப்போற்சவ நிகழ்ச்சியை குளத்தை சுற்றியும் நின்ற பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.நேற்று மாலை சந்தான சேவை நிகழ்ச்சியுடன், சாற்றுமுறை உற்சவம் விழா நிறைவு பெற்றது.