சாத்தூரில் சுப்பிரமணியர்சாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2458 days ago
சாத்தூர்: சாத்தூர் செக்கடித்தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முனியப்ப சாமி, சுப்பிரமணியர்சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 21ல்) காலை 10:00 மணிக்கு நடந்தது. விருதுநகர் கலைமான் ஆயில்மில் உரிமையாளர் எம்.குணசேகரபாண்டி தலைமை வகித்தார். செல்வம்பட்டர், சிவாச்சாரியார்கள் புனிதநீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின்னர் தீபாராதனையுடன் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டியார், சாத்தூர் வணிக வைசிய சமுதாயத்தினர் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்