உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யலூரில் இருந்து சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 4,762 பக்தர்கள் பாதயாத்திரை

அய்யலூரில் இருந்து சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 4,762 பக்தர்கள் பாதயாத்திரை

வடமதுரை: அய்யலூரில் இருந்து ஒரே குழுவாக 4,762 பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரை யாக புறப்பட்டனர்.

அய்யலூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 30வது ஆண்டாக அய்யலூர் பகுதியை சேர்ந்த 4,762 பேர் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் (பிப்., 21ல்) இரவு அய்யலூர் களர்பட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக 1,500 பேர் என ஒரே குழுவாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் வரும் பிப்.24ல் சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !