கோபி வேலுமணி நகரில், சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2741 days ago
கோபிசெட்டிபாளையம்: கோபி வேலுமணி நகரில், பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மூலவருக்கு நேற்று (பிப்., 22ல்) சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், வேலுமணி நகர், லக்கம்பட்டி, ல.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், பச்சமலை, பவளமலை முருகன் கோவில்களில் உள்ள விநாயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.