உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையத்தில், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குமாரபாளையம், வரசித்தி விநாயகர், ஜல விநாயகர், தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, காலபைரவர், நவக்கிரஹ கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த, 21ல் தீர்த்தக்குட ஊர்வலத்துடன் விழா துவங்கியது. நேற்று (பிப்., 22ல்) காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்து, 7:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்து, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜைகள் நடக்கவுள்ளதால், கட்டளைதாரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !