ஆத்தூர் விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி பூஜை
ADDED :2458 days ago
ஆத்தூர்: வெள்ளை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, வெள்ளை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி பூஜை, நேற்று (பிப்., 22ல்) நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு, அபிஷேகம் நடந்தது.
சுவாமி மூஷிகவாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். மூலவர், வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், ஆத்தூர், ராணிப்பேட்டை செல்வ விநாயகர், விநாயகபுரம் விநாயகர், கோட்டை தலையாட்டி விநாயகர், கடைவீதி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.