புதுச்சேரி சிருங்கேரி மடத்தில் நாம சங்கீர்த்தனம்
ADDED :2457 days ago
புதுச்சேரி: ராதாகிருஷ்ண பஜன் மண்டலி சார்பில், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி இன்று (பிப்., 23ல்) துவங்குகிறது. புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் ஆலயத்தில், இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி) இரண்டு நாட்களுக்கு மாலை 6:00 மணிக்கு துவங்கி, 9:00 மணி வரை, நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடையாளூர் கல்யாணராம பாகவதர் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு நாம சங்கீர்த்தனம் நிகழ்த்துகின்றனர். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, ராதாகிருஷ்ண பஜன் மண்டலியின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன், செயலர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளனர்.