திருப்பூரில் ஹயக்ரீவர் பூஜை நிறைவு
ADDED :2457 days ago
திருப்பூர்:திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர் நலன் வேண்டி, சிறப்பு யாகம், திருமஞ்சனம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்கின்றன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, நிறைவு வழிபாடு நாளை (பிப்., 24ல்)நடக்க உள்ளது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு ஹயக்ரீவர் வேள்வி பூஜையும், 11:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.மாணவ, மாணவியர் பங்கேற்று, அருள்பெற வேண்டுமென, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.