சோமனூர் அருகில், புவனேஸ்வரி கோவிலில் ஆண்டு விழா
ADDED :2457 days ago
கருமத்தம்பட்டி: சோமனூர் அருகில், சேடபாளையம் ஏ.சி.எம்., நகரில் அமைந்துள்ள ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் உடனமர் புவனேஸ்வரர் திருக்கோவிலின் எட்டாம் ஆண்டு விழா நேற்று (பிப்., 22ல்) நடைபெற்றது.
எட்டாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நேற்று (பிப்., 22ல்) காலை எட்டு மணி முதல் விநாயகர் வழிபாடு, கோ பூஜை மற்றும் கலச பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு ருத்ர ஹோமம், பின்னர் லலிதா சகஸ்ரநாமம் (108 மூலிகை யாகம்) நண்பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் நண்பகல் ஒரு மணிக்கு அன்னதானமும் நடந்தன.மேலும், நேற்று (பிப்., 22ல்)காலை 8:00 மணிக்கு கேரள முறைப்படி பிரம்மஸ்ரீ எடமனா சங்கரன் நம்பூதிரிகள் நடத்தும் சிறப்பு நாகபூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.