எந்த வழி நல்லவழி?
ADDED :2601 days ago
ஒருமுறை நாயகத்தின் நண்பர்களில் ஒருவர் திடகாத்திரமான உடலுடன் சாலையில் சென்றார். அவரைப் பார்த்த சிலர், “நபிகளாரே! உடல்பலம் மிக்க இவர் அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் எவ்வளவு உதவியாக இருக்கும்” என்றனர். அதற்கு “தோழர்களே! பச்சிளங்குழந்தைக்கு சேவை, பெற்றோருக்கு பணிவிடை, நெறி கெட்ட வழிகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ளுதல் ஆகிய நோக்கத்திற்காகச் செல்கிறார் என்றால் அது நல்லவழி. பெருமை, புகழுக்காகவும் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழி” என்றார்.