உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெறிக்கான ரகசியம்

வெறிக்கான ரகசியம்

* தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. ஒழுக்கமுடன் வாழ்வதே   வெற்றிக்கான வழி.
* உலக ஆசைகளில் சிக்கிக் கிடக்கும் மனதை குருவால் மட்டுமே  சுதந்திரமாக்க முடியும்.
* மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடம் அமைதி, பொறுமை, மன்னிக்கும் குணம் போன்ற நற்பண்புகள் இருக்க்கும்.
* மவுனமாக இருப்பது  நல்லது. ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்தால் மவுனமாகாது.
*  மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும் போது சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது.  
* நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் வலிமை அற்ற மனம் தான்.
* வலையில் பிடிபடும் பறவை போல மூச்சுப்பயிற்சி மூலம் அலையும் மனதை அடக்க முடியும்.
* எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பலன் உண்டு.
* கடவுளின் திருநாமங்கள், மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும்.  சொல்கிறார் ரமணர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !