பழநி மாரியம்மனுக்கு 2,007 குடங்களில் பால் அபிஷேகம்
பழநி : மாசித் திருவிழாவைமுன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலுக்கு 2,007 பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி வ.உ.சி.,மன்றம் தலைமையகம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து 2,007 பால்குடங்கள் எடுத்து நகரமுக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். கிழக்குரதவீதி மாரியம்மன் கோயிலில் உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் அலங்காரம், வழிபாடு செய்து, இரவில் உற்சவசாந்தி விழா நடந்தது.
சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், செந்தில்குமார், கார்த்திகேயன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், பழநி வ.உ.சி., தலைமைமன்றம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்சங்கம் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.