சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை
ADDED :2715 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுக பைரவர் பூஜை நடந்தது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
இங்கு தேய்பிறை அஷ்டமி தினமான பிப். 26 ம் தேதி வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.