உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் .ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்

கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் .ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்

கும்பகோணம்: பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராமத்தின் சத்சங்கம் மயிலாடுதுறை சேமங்கலம் மற்றும் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கார்டன் டபீர் புது தெருவில் நடந்தது .

இந்த சத்சங்க நிகழ்ச்சியில் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற் காக வைக்கப்பட்டு,வேதபாராயணத்துடன் கூடிய பூஜராதனைகள் நடை பெற்றது.

பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி.வெங்கடசுப்பிரமணியன் விளக்க உரை ஆற்றினார் .

தன்னுடைய அந்த உரையில் சங்கராபுரம் என்கிற வேத கிராமம் மிக பெரியளவில் உருவாகி கொண்டிருக்கும் விதத்தையும், காஞ்சி மாமுனி ஜகத்குரு 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளும் அனைவராலும் பெரியவா என பயபக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பிரமாண்டமான கோவிலும் , குளங்களும் , கோசாலையும் , 200 மாணவர்கள் படிக்கும்படியான வேத பாடசாலையும் , மேலும் 108 அக்னிஹோத்ரிகளின் கிரஹங்களும் நிர்மாணமாகி கொண்டு வருவத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் சங்கராபுரத்தின் வெவ்வேறு தற்போதய கட்டுமான பணிகளை பற்றியும் இந்த கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !