உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொழி வளர்ந்தால் சமூகம் வளரும்: பேரூர் ஆதீனம்

மொழி வளர்ந்தால் சமூகம் வளரும்: பேரூர் ஆதீனம்

கோவில்பாளையம்:தாய்மொழி வளர்ந்தால் சமூகம் வளரும் என, தேவம்பாளையத்தில் நடந்த விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசினார்.கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, தேவம்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சங்கத்தின் முதலாம் ஆண்டு மலரை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் வெளியிட, குமரன் மருத்துவமனை டாக்டர் ஹரிபிரசாத், கே.எம்.சி.எச்., ஆலோசகர் தினமணி, மாரப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மருதாசல அடிகள் பேசுகையில், மொழி வளர்ந்தால் சமூகம் வளரும். சமூகம் வளர்ந்தால், பண்பாடு, கலாசாரம் உயரும். நாடு உயரும். நல்ல குழந்தைகள் உருவாவார்கள். அவர்களுக்கு பண்டைய தமிழ் இலக்கியங்களை கற்பிக்க வேண்டும். இலக்கியம் கற்றால் மாணவர்கள் சமுதாயத்தை உணருவர். அப்போது அவர்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் சக்தியை பெறுவர். மேம்பட்ட வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும், என்றார்.

கல்லூரி தாளாளர் குழந்தைசாமி தொகுத்த, அருஞ்சொற்குவை என்னு நூலை புலவர் நஞ்சப்பன் வெளியிட பழமன், சுப்ரமணியம், பேச்சி முத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.ஒன்பது துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாணவர்கள் திருக்குறள் வாசித்தனர் வானதி சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !