தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
ADDED :2525 days ago
கிருஷ்ணராயபுரம்: அரசு பொதுத்தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற வேண்டி, கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில், ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மாணவர்கள் நினைவாற்றலுடன் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் சார்பில், இந்த சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுவாமிக்கு மஹா அபிஷேகம் அலங்காரம் செய்து, எழுதுகோல் வைத்து பூஜை செய்து, மாணவர்களுக்கு தரப்பட்டது. இதில், மாணவ, மாணவியர், பெற்றோர் பலர் கலந்துகொண்டனர்.