உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரி விழா: காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு ஏற்பாடு

மஹா சிவராத்திரி விழா: காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு ஏற்பாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மார்ச், 4ல் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கைலாசநாதர், கச்சபேஸ்வரர், ஏகாம்பரநாதர் கோவில்களில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மஹா சிவராத்திரி விழா, மார்ச், 4ல் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் கைலாசநாதர் கோவிலில், அன்று மாலை முதல், அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக, கோவில் வளாகத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே போல், கச்சபேஸ்வரர் கோவிலில், அன்று காலை, ஆன்மிக சொற்பொழிவு, வித்வான்கள் நடத்தும் சங்கீத நிகழ்ச்சி, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஏகாம்பரநாதர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !