நெல்லிக்குப்பம் பூலோகநாதர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு
ADDED :2448 days ago
நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் சுவாமி மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நேற்று முன்தினம் (பிப்., 26ல்) நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் பல சிறப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டும், காலையில் சூரியஒளி நேரடியாக சுவாமி பாதத்தில் விழுவது போல் கட்டுமானம் செய்துள்ளனர்.அன்று காலை 6.05 மணிக்கு சூரிய ஒளி நேராக பூலோகநாதர் மீது விழுந்து அவரை வணங்குவது போல் காட்சியளித்தது. இந்த ஆபூர்வமான காட்சியை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கண்டு வணங்கினர்.