உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி மாவட்டம், பஷ்வேஸ்வரா சுவாமி கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், பஷ்வேஸ்வரா சுவாமி கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த போடூர் கிராம காட்டில் உள்ள பஷ்வேஸ்வரா சுவாமி கோவிலில் திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. சுவாமி அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இக்கோவிலில், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பாணம் விடுவது வழக்கம். அதன்படி பக்தர்கள் பாணங்களை விட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !