உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி பெற அழைப்பு

ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி பெற அழைப்பு

கரூர்: ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு நிதியுதவி பெற, கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும், 50 கன்னியாஸ்திரிகள், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவியாக, ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இப்பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் புனித தலங்களையும் உள்ளடக்கியது. மார்ச் முதல், ஜூன் வரை, பயணம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம், 10 நாட்கள். இதற்கான விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.

இதற்கான விதிமுறைகளை www.dbccmwo.tnkar@nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மஹால் பாரம்பரிய கட்டடம், (இரண்டாவது தளம்), சேப்பாக்கம், சென்னை 5 என்ற முகவரிக்கு மார்ச், 15க்குள் அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !