கரசங்கால் மல்லீஸ்வரர் கோவிலில், 10,008 தீப வழிபாடு
ADDED :2709 days ago
கரசங்கால்: கரசங்கால் மல்லீஸ்வரர் கோவிலில், வரும், 4-ம் தேதி சிவராத்திரி அன்று, 10 ஆயிரத்து எட்டு தீபங்கள் ஏற்றி, சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்காலில், பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுறை மல்லீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு, 4-ம் தேதி, மஹா சிவராத்திரியை முன்னிட்டு, 10 ஆயிரத்து எட்டு அகல் தீபங்கள் ஏற்றி, நான்கு கால சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. மேலும், 108 பால் திருமுழுக்கு, கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், பஞ்சாமிர்த திருமுழுக்கு, 108 இளநீர் திருமுழுக்குடன், இரவு முழுவதும், மஹா சிவராத்திரி விழா, விமரிசையாக நடைபெற உள்ளது.