காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்,
ADDED :2450 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும், 17ல் நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரத்தில், பெருமாளின், 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும், யதோக்தகாரி பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து நடக்கின்றன. மார்ச், 14ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. பின், 17ம் தேதி காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை, 6:30 மணிக்கு, பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.