உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கே.கே., நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர்

கே.கே., நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர்

சாத்துார்: சாத்துார் கே.கே.நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியினர் வழிபடுவதற்காக  ஸ்ரீசக்திவிநாயகரை பீடமாக உருவாக்கினர். ஆன்மிக அன்பர்களின் விருப்பப்படி தற்போது அது கோயிலாக மாறியுள்ளது. ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் மாவட்டத்தில் மூன்றாவது சன்னதியாக ஸ்ரீலட்சுமிஹயக்கிரீவர் சன்னிதி.

காசிவிஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், பைரவர் சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயில் அர்ச்சகர் சுதர்சனசர்மா கூறுகையில்,‘‘விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் முருகன் கோயில், ஈஞ்சார் ஆஞ்சநேயர் கோயில் அடுத்து லட்சுமிஹயக்கிரீவர் சன்னிதி சாத்துார் கே.கே.நகர் ஸ்ரீசக்திவிநாயகர் கோயிலில் தான் உள்ளது. லட்சுமிஹயக்கிரீவர்  சரஸ்வதிக்கு குருவானவர். இவரை வணங்கினால் கல்வி கிடைக்கும், அறிவு மேம்படும். வாழ்வில் சகலவசதிகளும் கிடைக்கும். அழியாத செல்வம் கல்வி தரும் குருவாக விளங்குகிறார். மாணவர்கள் ஸ்ரீ லட்சுமிஹயக்கிரீவரை வணங்கி தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவார்கள். புதன், வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது,’’ என்றார். நீங்களும் ஸ்ரீலட்சுமிஹயக்கிரீவர் அருள் பெற 97903 52007ல்  அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !