உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து, 23ம் தேதி இரவு, கம்பம் நடும் நிகழ்ச்சி, 27ல் கிராம சாந்தி, 28ல் கொடியேற்று விழாவும் நடக்கும். ஏப்.,2ல், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அன்றிரவு பெரிய மாரியம்மன் திருவீதி உலா நடக்கும். ஏப்.,3ல் பொங்கல் விழா, சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கும். ஏப்.,5ம் தேதி மாலை, சின்ன மாரியம்மன் கோவில் தேர் நிலைசேர்தல், சின்னமாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு, ஏப்.,6ல் நடக்கவுள்ளது. இதற்காக மூன்று கோவில்களிலும் உள்ள கம்பங்கள் எடுக்கப்பட்டு, திருவீதி உலாவுடன் காரை வாய்க்காலில் விடும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்.,7ல், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறும். ஒரு மாதம் நடக்கவுள்ள விழாக்காக, கோவில் வளாகம் தொடங்கி, வணிகவரித்துறை அலுவலகம் வரை, பந்தல் மற்றும் திருவிழா கடைகள் அமைக்கப்படும். இவற்றுக்கான பந்தல் அமைக்க, கால்கோள் அமைக்கும் நிகழ்வு, நேற்று நடந்தது. பூஜிக்கப்பட்ட பந்தக்கால் மூங்கிலை, ஊர்வலமாக கோவில் பூசாரிகள் கொண்டு வந்து, கோவிலில் நட்டனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !