உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனிய யாத்திரை சென்றவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

புனிய யாத்திரை சென்றவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

 சென்னை: மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை சென்றவர்கள், இனி யாத்திரை செல்வோர், அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய தலங்களுக்கு, புனித யாத்திரை சென்றவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில், மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி, நடப்பு நிதியாண்டில், புனித யாத்திரை சென்றவர்கள், மானியம் பெற, விண்ணப்பிக்கலாம். மேலும், மார்ச், 31 வரை, புனித யாத்திரை செல்வோரும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நபர்கள், www.tnhrce.gov.in என்ற இணைய தளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகள் இணைப்புடன், ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை, எண், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34 என்ற முகவரிக்கு, ஏப்., 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மானசரோவர் சென்றவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய்; முக்திநாத் சென்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !