உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருங்கற்களில் உயிர்பெறும் சிலை சிவகங்கை சிற்பியின் கலைநயம்

கருங்கற்களில் உயிர்பெறும் சிலை சிவகங்கை சிற்பியின் கலைநயம்

சிவகங்கை: கல்லில் சிலை செதுக்கி ரசித்த நம் தமிழன். கடவுளுக்கு சிலை வடித்து கோயிலில் வைத்து, ஆன்மிகத்தை வளர்த்தான். இயற்கையாகவே கற்சிலைகளுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.

இதன் காரணமாகவே இன்றைக்கும் புதிய கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்துவோர் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளையும் கருங்கற்களால் வடிவமைத்து அதற்கு சக்தி வழங்கி வழிபடுகின்றனர்.

அவ்வகையில் சிவகங்கை அருகே சாமியார்பட்டி விலக்கில் கருங்கற்களால் சுவாமி சிற்பங்களை தத்ரூபமாக செதுக்கி வருகிறார் அலவாக்கோட்டை சிற்பி ஆர். வரதராஜ்.
அவர் கூறியதாவது: இதற்கான கருங்கற்களை கோவை மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து வாங்குகிறோம். இக்கற்கள் தான் மிஷினில் செதுக்கும் போது சேதமடையாமல் பாலீசாக இருக்கும். மூன்றரை அடி உயரம் முதல் 60 அடி உயரம் வரையிலான சிலைகள் செய்து தருகிறோம்.

முதலில் கருங்கல்லில் சுவாமி வடிவத்தை தத்ரூபமாக வரைவோம்.அந்த வரைபடத்தின் படியே மிஷினால் கற்களை செதுக்கி, உருவம் கொடுப்போம். அம்மன், சுவாமி அம்பாள் சிலைகளுக்கு ஆபரண டிசைன் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிஷின் இன்றி (நாகாஷ்) கையாள் செதுக்குவோம். சிறிய சிலைகள் செய்ய 3 நாட்களும், பெரிய சிலைகள் அதன் வேலைபாட்டை பொறுத்து 60 நாட்கள் வரை ஆகும்.

குறைந்தது சிலை தயாரிக்க 7 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறோம்.

கற்சிலை செதுக்க காரைக்குடி கோவிலூர் மடத்தில் பயிற்சி பெற்றுள்ளேன். அதன் மூலம் இத்தொழிலில் ஆர்வத்தை செலுத்தி, இறைவனுக்கு என் கலைப்பணியை அர்ப்பணிக்கிறேன், என்றார்.இவரை பாராட்ட... 89408 88831.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !