அன்னூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் விழா
ADDED :2449 days ago
அன்னூர்: கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நேற்று (மார்ச்., 1ல்) கொடியேற்றம் நடந்தது.
கஞ்சப்பள்ளியில், 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 14ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா நேற்று (மார்ச்., 1ல்) காலை கணபதி
ஹோமத்துடன் துவங்கியது.
பின்னர் கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது. மதியம் பரிவார தேவதைகளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன; அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 4ம் தேதி அதிகாலையில் குண்டம் கண் திறத்தல்
நடக்கிறது.மாலையில், கன்னிமார் பூஜை, பால் குடம் எடுத்து வருதல் நடக்கிறது. இரவு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி காலை 5:30 மணிக்கு பக்தர்கள் அக்னி
குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.