யோகிராம் சுரத்குமார் ஆராதனை
ADDED :2448 days ago
திருவண்ணாமலை:திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 18வது ஆராதனை விழா நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜையும் மூலவர் யோகிராம் சுரத்குமார் லிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்தனர். மாலையில் சற்குருநாத ஓதுவார் குழுவினரின் தேவார இசை நிகழ்ச்சி இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யோகிராம் உருவ சிலை மற்றும் லிங்க சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதியரசரும் ஆசிரம தலைவருமான அருணாசலம் வழிகாட்டுதலின் படி அறங்காவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.